பெட்ரோல் விலை 10 காசு குறைந்தது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்..14- இவ்வாரத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை கணிசமாகச் சரிவு கண்டுள்ளது. ரோன் -95 ரகப் பெட்ரோலின் விலை 10 காசு குறைந்தது.

ரோன்-95 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 33 காசுகளில் இருந்து 2 ரிங்கிட் 23 காசுகளாக குறைந்துள்ளது. 

ரோன்-97 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 61 காசுகளில் இருந்து 2 ரிங்கிட் 50 காசுகளாக குறைந்திருக்கிறது.

இதன்வழி ரோன் -97 ரகப் பெட்ரோல் இவ்வாரம் 11 காசுகள் குறைந்தது. டீசல் 12 காசுகள் குறைந்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 19 காசுகளாக விற்கப்படுகிறது

பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி  வரைக்குமான விலை நிலவரம் இதுவாகும்.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS