புல் வெட்டும் இயந்திரக் கத்தி பட்டு மாணவி பலி: 300 மீட்டர் தொலைவில் கத்தி மீட்பு!

சமூகம்
Typography

தம்பின், பிப்.15- இடைநிலைப்பள்ளி திடலில் புல் வெட்டி கொண்டிருந்தபோது இயந்திரத்தின் கத்தி உடைந்து அருகில் நின்று கொண்டிருந்த இரண்டாம் படிவ மாணவி மீது பாய்ந்ததில் அம்மாணவி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உடைந்த கத்தி 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்பு புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. 

இங்குள்ள துவாங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப்பள்ளியில் நேற்று இச்சம்பவம் நடந்தது. சம்பவத்தின்போது பள்ளியில் நடக்கவிருந்த விளையாட்டுத் தினத்திற்காக மாணவ கும்பல் ஒன்று பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு புல் வெட்டி கொண்டிருந்த இயந்திரலிருந்து உடைந்த கத்தி ஒன்று நூர் அபினி ரோஸ்லான் எனும் மாணவியின் தலையில் பாய்ந்தது.

மாணவியின் மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அக்கத்தி வெட்டியதால் நூர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்று மணிநேரம் கழித்து சம்பந்தப்பட்ட உடைந்த கத்தியை மீட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏறக்குறைய 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் புதர் ஒன்றில் அந்த கத்தி கண்டுப்பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS