டுரியான் கோப்பி விவகாரம்: நால்வரும் ஷாபு போதைப்பொருள் உட்கொண்டிருந்தனர்- தெய்வீகன்

சமூகம்
Typography

ஜோர்ஜ்டவுன், பிப்.16- உடனடி கோப்பிக் கலவை (Instant coffee mixture) காரணமாக பினாங்கு மருத்துவமனையில்  சிலர் சேர்க்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட நால்வரும் ஷாபு வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தது தெரியவந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ தெய்வீகன் கூறினார்.

இந்த போதைப்பொருள் தொடர்பான முடிவு கடந்த வாரமே கிடைத்து விட்டாலும் கோப்பித் தூளின் இராசயன முடிவு இன்னும் கிடைக்காததால் எந்த இறுதி முடிவையும் எடுக்க வில்லை என அவர் கூறினார். 

சம்பந்தப்பட்ட நால்வரின் ரத்த மற்றும் சிறுநீர் சோதனையில் அவர்கள் ஷாபு போதைப்பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது. ஆனால், அது சம்பந்தப்பட்ட உடனடி கோப்பி கலவையில் கலக்கப்பட்டிருந்ததா என்பது உறுதியாக தெரியவில்லை என அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, பெண் ஒருவரால் விற்கப்பட்ட கோப்பியைக் குடித்த ஐவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இது 'டுரியான் வொய்ட் கோப்பி' எனக் கூறி அந்த கோப்பிக் கலவையை அப்பெண் விற்பனை செய்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS