மசீசவின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு; மக்களுடன் நஜிப் சிறப்பு வருகை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.16- சீனப் புத்தாண்டை முன்னிட்டு மசீச ஏற்பாட்டில் இன்று நடந்த திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு வருகை புரிந்தார். 

இன்று காலை 9.45 மணியளவில் தனது துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உடன் வருகை புரிந்த பிரதமரை மசீசவின் தலைவர் டத்தோஶ்ரீ லியாவ் தியோங் லாய் மற்றும் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் ஆகியோர் வரவேற்றனர்.

மேடைக்கு வந்த பிரதமர், நாடு மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் சக்தியின் அடையாளமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பொன்சாய் செடிக்கு நீர் ஊற்றினார். பின்னர் டத்தோஶ்ரீ லியாவ் அந்த பொன்சாய் செடியை சீனப் புத்தாண்டு பரிசாக பிரதமருக்கே வழங்கினார்.

திறந்த இல்ல உபசரிப்பில் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அமாட் ஷாஹிட் ஹமிடி, மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்ரமணியம், மைபிபிபி தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ், கெராக்கான் தலைவர் டத்தோஶ்ரீ மா சியு கியோங் ஆகியோர் கலந்து கொண்டனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS