'நாய் புத்தாண்டு: வாழ்த்துச் சொன்னதோ சேவல்!' விளம்பரத் தவறுக்காக அமைச்சு மன்னிப்பு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.16- சீனப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  சீன தினசரிகளில் உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு  வெளியிட்டிருந்த முழுப் பக்க வாழ்த்து விளம்பரங்களில் குரைக்கும் நாய் படத்திற்குப் பதிலாக குரைக்கும் சேவல் படத்தை பிரசுரித்ததற்காக அமைச்சு மன்னிப்புக்கேட்டுக் கொண்டுள்ளது.

உணமையில் சீனர்களுக்கு இந்ட்தப் புத்தாண்டு நாய்கள் ஆண்டாகும். ஆனால் அமைச்சு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் சேவல் ஒன்று 'வாங் வாங்' கத்துவது போன்ற படம், இடம் பெற்றுள்ளது. வாங் வாங் என்பது வளப்பத்தைக் குறிப்பதாகும்.

சீனர்களுக்கான நாய்கள் புத்தாண்டில் சேவல் இடம்பெற்றது குறித்து சமூக வலைத் தளங்களில் கடும் சர்ச்சை கிளர்ந்தது. சீன சமுதாயத்தில் பலருக்கு இந்த விளம்பரம் வாழ்த்துக் கூறுகிறது என்பதைக் காட்டிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றே கருதப்பட்டது.

பின்னர் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அமைச்சு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. 

"தொழில் நுட்ப தவறு காரணமாக இது நடந்து விட்டது. இத்தகைய சீனப் புத்தாண்டு வாழ்த்து விளம்பரத்தை வெளியிட்டதற்காக அமைச்சு மில்லியன்  முறை மன்னிப்புக்  கேட்டுக்கொள்கிறது. அதேவேளையில் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" அமைச்சின் முகநூல் பதிவு தெரிவித்திருக்கிறது.

நாய் ஆண்டுக்கு நாய் படத்திற்கு பதிலாக சேவல் படத்தை வெளியிட்ட விவகாரத்தில், எப்படி நடந்தது இந்தக் குழப்பம் என்பதற்கான விளக்கம் எதனையும் அமைச்சு வெளியிடவில்லை.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS