தாய் அன்பழகியின் பிறந்த நாளன்று உயிர் நீத்த நகுலன் - பேச்சீஸ்வரன்!

சமூகம்
Typography

அலோர்ஸ்டார், பிப் 16- உலுயாம் பாரு நீர் வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றிருந்த போது நீர் மூழ்கி இறந்த மூன்று இந்திய இளைஞர்களில் சகோதர்களான இளம் நடிகர் நகுலன் மற்றும் பேச்சீஸ்வரன் ஆகிய இருவரையும் இழந்த துயரத்தில் கதறியழுதார் அவர்களின் தாயாரான 48  வயதுடைய குடும்ப மாது அன்பழகி.

தன்னுடைய பிறந்த நாளன்று இரு பிள்ளைகளைப் பறிகொடுத்து இருக்கிறார் அன்பழகி. 

காலையில் பிறந்த நாளுக்கு தாயாருக்கு வாழ்த்துக் கூறினார்கள். அதன் பிறகு பிற்பகலில் அவர்களின் மரணச் செய்தி தாயாருக்கு வந்த சேர்ந்த போது துயரத்தில் இடிந்து போனார் அன்பழகி. 

நகுலன்- பேச்சீஸ்வரன் ஆகியோரை இழந்து, அளவிட முடியாத துயரத்தில் தாயார் அன்பழகி மூழ்கி இருக்கிறார் என்று இந்த சகோதரர்களின் மாமாவான அறிவழகன் கூறினார்.

காலை 11.55 மணியளவில் நீரில் மூழ்கி விட்ட நகுலன், பேச்சீஸ்வரன் மற்றும் கணேசன் ஆகிய மூவரும் நண்பகல் 1.15 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS