'பி-40' இந்திய கும்பங்களுக்கு உதவ புதிய முதலீட்டு நிதி- பிரதமர் அறிவிப்பு

சமூகம்
Typography

லங்காவி, பிப்.17- அமானா சஹாம் சத்து மலேசியா திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வசதியாக பி-40 எனப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ளார்.

இந்நோக்கத்திற்காக 500 மில்லியன் ( 50 கோடி) ரிங்கிட் ஒதுக்கப் படவிருப்பதாகவும் ஒரு நபருக்கு 5,000 யூனிட் பங்குகள் மட்டுமே எனக் கட்டுப்பாடு விதிப்பதன் வழி  அதிகமான இந்தியர்கள் இதன் மூலம் பலனடைய வழிபிறக்கும் என்றும் என்றும் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

லங்காவியில் நேற்று நடந்த 'தே தாரே' என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஏற்கெனவே இந்தியர்களின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அமானா சஹாம் சத்து மலேசியாவின் பங்குகளை வாங்குவதற்கு  150 கோடி ரிங்கிட் நிதித் திட்டத்தை பிரதமர் அறிவித்திருந்தார். ஒரு முதலீட்டாளருக்கு 30ஆயிரம்  யூனிட்டுகள் மட்டுமே விற்கப்படும் என்ற இந்தத் திட்டம் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கியது.

தற்போது புதிதாக ஒதுக்கப்படவிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள இந்தியக் குடும்பங்களுக்கான திட்டம் சுமார் ஒரு லட்சம் இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த உதவும் என்று பிரதமர் நஜிப் சொன்னார்.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS