அலைமோதிய வாடிக்கையாளர்கள்  எங்கே? வெறுச்சோடியது பெட்டாலிங் ஸ்த்ரீட்!

சமூகம்
Typography

கோலாலம்பூர்,பிப்.17- என்ன பொருளாக இருந்தாலும் பேரம் பேசி வங்குவதற்குப் உள்நாட்டவருக்கும் சரி, வெளி நாட்டவருக்கும் சரி  பொருத்தமான இடமென்றால், அது கோலாலம்பூர்  பெட்டாலிங் ஸ்த்ரீட் என்ற காலம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்தே பெட்டாலிங் ஸ்த்ரீட்டில் வியாபாரம் 30 முதல் 40 விழுக்காடு வரை குறைந்து விட்டது என்று அங்காடிக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆங் சே டீ கூறினார்.

இவ்வாண்டு கூட சீனப் பெருநாள் தருணமாக இருந்தும் வாடிக்கையாளர்கள் இல்லாமல் தவிப்பில் இருக்கிறார்கள் பெட்டாலிங் ஸ்த்ரீட் வியாபாரிகள் என்கிறார் ஆங் சே டீ.

இங்கு சுமார் 773 அங்காடிக் கடைக்காரர்கள் இருக்கிறார்கள். பல்வேறு பொருள்களை வாங்க இங்கு உள்ளூர்க்காரர்களும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் அலை மோதுவார்கள். எந்தப் பொருளாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் நிறைய பேரம் பேசுவதற்கான வாய்ப்புள்ள இடமாக இது விளங்கியது.

கடந்த ஏப்ரல் 2015-இல் ஜிஎஸ்டி வரி அறிமுகமானது முதல் எங்களின் வியாபாரம் சரியத்  தொடங்கி விட்டது. பொருள்களின் விலை அதிகரித்து விட்டது. ஆனால் எங்களின் சம்பளம் அப்படியே தானே இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள் என்று ஆங் சே டீ கூறினார்.

பெட்டாலிங் ஸ்த்ரீட்டில் மக்கள் நடமாட்டமே  குறைந்து விட்டது. கடை வாடகை முதல் வேலையாள் கூலி வரை எல்லாமே அதிகரித்து விட்டதால் வியாபாரமும் சரிந்த நிலையில் சமாளிக்க முடியாத நிலையில் இந்த அங்காடி வியாபாரிகள் உள்ளனர் என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS