ஈப்போ சுரங்கப் பாதையில் கடும் விபத்து; மோதி தடம்புரண்ட கார்கள்!

சமூகம்
Typography

ஈப்போ, பிப்.19- இங்குள்ள மெனோரா சுரங்கப் பாதையின் உள்ளே இரு கார்கள் மோதிக் கொண்டப்பின் நடுசாலையில் கவிழ்ந்தன. இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்று காலை 11.30 மணியளவில் ஈப்போவிலிருந்து கோலகங்சார் செல்லும் சுரங்கப் பாதை உள்ளே 261.4 கிமீ-இல் பயணித்துக் கொண்டிருந்தபோது இரு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இதில் இரு கார்களும் தலைக்கீழாக கவிழ்ந்தன.

சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்குக் காலை 11.31 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் சம்பவ இடத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை என்றும் மீட்பு படை பேச்சாளர் கூறினார்.

விபத்தில் மற்றவர்கள் பாதிக்கா வண்ணம் மீட்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் வாகன நெரிசல் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS