லங்காவி: அந்தரத்தில் கேபிள் கார் சிக்கி கொண்டால் என்ன? அதன் மவுசு குறையவே இல்லை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.19- லங்காவியின் பிரபல கேபிள் கார் சேவையில் நேற்று கோளாறு ஏற்பட்டு 88 பேர் அந்தரத்தில் சிக்கி தவித்தாலும் இன்று அதில் ஏறுவதற்கு மக்கள் கூட்டம் நிரம்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.55 மணியளவில் லங்காவி ஸ்கைகேப் எனும் தொங்கும் கேபிள் காரின் ஒரு 'பேரிங்கில்' பழுது ஏற்பட்டதை அடுத்து அதன் சேவை நிலைக்குத்தியது. இதனால் மச்சிங்சாங் மலைக்கு ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த 88 பேர் அந்தரத்தில் தொங்கினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் இடை நிலையங்களில் சிக்கி தவித்தனர்.

இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த கேபிள் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், 3,000க்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கி வரிசையில் நின்றனர் என பனோராமா லங்காவி நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ அஜிஜான் நோர்டின் கூறினார்.

ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். மேலும், இது வழக்கமான ஒன்று தான் என்று கூறிய அஜிஜான், எந்த சுற்றுப்பயணிகளும் நேற்றைய தொழில்நுட்ப கோளாறினைக் காரணம் காட்டி பயணத்தை ரத்துச் செய்யவில்லை என சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS