மெர்சிங் அருகே பயணிகள் பேருந்து தடம் புரண்டது! 15 பேர் காயம்!

சமூகம்
Typography

மெர்சிங், பிப்.19- மெர்சிங்கிற்கு அருகில் நிடார் சாலையின் 17ஆவது கிலோ மீட்டரில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் தடம் புரண்டதில்  15 பயணிகள் காயமடைந்தனர்.

மலாக்காவில் இருந்து மெர்சிங்கிற்குச் சென்று கொண்டிருந்த  இந்தப் பேருந்தில் 32 பயணிகள் இருந்தனர். இவர்களில் ஜொகூர் மெர்சிங் பொலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்களும் அடங்குவர்.

நேற்று நள்ளிரவு 12.35 மணியளவில் நிடாரிலுள்ள பெல்டா பண்ணைக்கு அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது எனத் தெரிய வந்துள்ளது.

இந்தப் பேருந்து விபத்தில் காயமடைந்த 15 பேரில் 14 பேர் பெல்டா நிடார் சுகாதாரக் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்றனர். எனினும் இந்தப் பெருந்தில் பயணம் செய்த ஒரேயொரு பெண் பயணி மட்டும் கடுமையாகக் காயமடைந்தார். அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விலாப் பகுதியிலும் கடுமையாக காயமடைந்தார். அவர் மெர்சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS