புளூபிரிண்ட் திட்டம்: இராணுவத்தில் இந்தியர்களுக்கு 7% ஆள் சேர்ப்பு - சுப்ரா தகவல் (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.19- இராணுவத்துறையில் இந்தியர்களுக்கு 7 விழுக்காடு வரை வாய்ப்புகள் தர இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் மஇகாவின் தேசிய தலைவரும் புளூபிரிண்ட் கண்காணிப்பு தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட புளூபிரிண்ட் எனப்படும் இந்தியர்களுக்கான வியூக பெருந்திட்ட வரைவு தொடர்பாக இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இராணுவத்துறையில் இந்தியர்கள் 7 விழுக்காடு வரை பங்கேற்கும் வகையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு இராணுவத்துறை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் டாக்டர் சுப்ரா கூறினார்.

மேலும், ஒரே மலேசியா அமானா சஹாம் திட்டத்தில் இந்தியர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும் இதுவரை 317 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ வீடமைப்பு திட்டங்களில் இந்தியர்களுக்கு வீடு கிடைக்கப்பெறும் வகையில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரா மேலும் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS