குண்டர் கும்பல்:  36 பேர் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை

சமூகம்
Typography

ஈப்போ,பிப்.19- சிறப்பு ஒப்ஸ் சண்டாஸ் சில்வர் என்ற நடவடிக்கையின் மூலம் கொலை, கொள்ளை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் போதைப் பொருள் வினியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும்  குண்டர் கும்பலைச் சேர்ந்த 36 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 20 வயது முதல் 60 வயது வரையிலான இந்த சந்தேகப் பேர்வழிகள், இரகசிய கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள். மேலும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கோலாலம்பூர் தாமான் ஓயூஜி.யில் 'டத்தின்' ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ஜனவரி 27ஆம் தேதி பேரா, சிலாங்கூர், மலாக்கா, மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர் என்று பேரா போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான் கூறினார்.

இவர்களுக்கு எதிரான புலன் விசாரணைகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இவர்கள் மீது நாளை செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படவிருக்கிறது என்றார் அவர். 

இந்தக் கும்பலைச் சேர்ந்த இன்னும் சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள், போலீசாரால் தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நாட்டை விட்டு ஓடியிருந்தால், அவர்களைப் பிடிக்க 'இண்டர்போல்' எனப்படும் அனைத்துலகப் போலீசாரின் உதவியை நாடவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக அவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS