நீண்ட விடுமுறை முடிந்தது; நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஆரம்பமானது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.20- சீனப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறையில் இருந்த மலேசியர்கள் தங்களின் வேலை இடங்களுக்கு திருப்ப தொடங்கியுள்ளதால் பல  நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் தொடங்கியுள்ளது.

குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி வரும் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் காலை 7 மணி தொடங்கி வாகன நெரிசல் ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலானோர் இன்று வேலைக்கு திரும்புவதால் காலை முதல் இந்த நெரிசல் தொடங்கியுள்ளது.

நேற்று நண்பகல் முதல் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரித்த நிலையில் மாலையில் வடக்கிலிருந்து தென் நோக்கி வரும் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.

போக்குவரத்தைச் சரி செய்யவும் சாலை விதிகளை வாகனமோட்டிகள் மீறாமல் இருக்கவும் மோதுமான போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக நகரின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை தலைவர் துணை ஆணையர் சூல்கிப்லி யாஹ்யா கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS