கேங் 04-ஐ சேர்ந்த 36 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்; போலீஸ் பலத்த பாதுகாப்பு!

சமூகம்
Typography

ஈப்போ, பிப்.20- கேங் 04 எனும் குண்டர் கும்பலைச் சேர்ந்த 36 உறுப்பினர்களைப் போலீசார் இன்று இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் ஆயுதமேந்திய போலீஸ் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

கொள்ளை, போதைப்பொருள் விநியோகம் மற்றும் கோலாலம்பூர், தாமான் ஓயூஜியில் பிரபலமான 'டத்தின்' ஒருவரின் கொலை என பல குற்றங்களில் ஈடுப்பட்டதாக கூறி இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

20 வயது முதல் 60 வயது வரையிலான இந்த 36 பேரும் பீனல் கோர்டு சட்டம் 130வி/டபள்யூ சட்டவிரோத கும்பலில் மற்றும் குற்றங்களில் ஈடுப்படுதல் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜனவரி 27ஆம் தேதி பேரா, சிலாங்கூர், மலாக்கா, மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே 36 பேரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிக அளவில் குழுமி இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். குடும்பத்தினர் யாரும் நீதிமன்றத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS