"என் மீது வழக்கா?  ரத்து செய்யுங்கள்!"  பிரியா வாரியர்  நீதிமன்றத்தில் மனு

சமூகம்
Typography

புதுடில்லி, பிப். 20- தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் 'புருவப் புயல்' நடிகை பிரியா வாரியர்.

அண்மையில் வெளியான 'ஒரு அடார் காதல்' மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உள்ள பிரியா வாரியர், தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார்.  

ஒரு அடர் லவ் படத்தில் வரும் 'மணிக்ய மலரய பூவி' பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். இது போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதில் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும்படியாக இல்லை என்பதால் அந்த பாடல் காட்சிகளை நீக்க முடியாது என்று படத் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்நிலையில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியா வாரியர்  உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்தார்.    

இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வழக்காகும், எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பிரியா வாரியர் சார்பிலான மனுவில் கூறப்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS