'கேங்க் 04' கும்பல்: 36 பேருக்கு எதிராக  தமிழ்-மலாயில் குற்றச்சாட்டு வாசிப்பு! -(Video)

சமூகம்
Typography

ஈப்போ, பிப்.20-  இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட 'கேங்க் 04'  என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த 36 பேர் மீது  குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 130V/W -பிரிவின் கீழ் குற்றக் கும்பலில் உறுப்பியம் பெற்றிருந்தது மற்றும் அத்தகைய கும்பலுக்கு உதவியது ஆகியவற்றுக்காக இவர்கள் மீது இன்று குற்றஞ்டாட்டப்பட்டது.

சுமார் 20 வயது முதல் 60 வயது வரையிலான இந்த சந்தேகப் பேர்வழிகள், இந்தக் கும்பலுடன் தொடர்புடையவர்கள்.  மேலும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கோலாலம்பூர் தாமான் ஓயூஜி.யில் 'டத்தின்' ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்க ளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ஜனவரி 27ஆம் தேதி பேரா, சிலாங்கூர், மலாக்கா, மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிருபணமானால், 20ஆண்டுகள் வரை இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட லாம்  எனக் கருதப்படுகிறது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் தேசிய மொழியிலும் தமிழிலும் வாசிக்கப்பட்டன. இவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை.

இந்த 36 பேரில் 16 பேரை வழக்கறிஞர்கள் பிரதிநிதித்தனர். இதர 20 பேருக்கு வழக்கறிஞர்கள் யாருமில்லை. இவர்களுக்கு ஜாமின் அனுமதி வழங்க மறுத்து விட்ட நீதிபதி முர்தாஷாடி அம்ரான், வழக்கு விசாரணைக்காக மார்ச் 20ஆம் தேதியை நிர்ணயம் செய்தார்.

குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

முகம்மட் ஷரீப், முகம்மட் சிடிக், ஏ.குகன், எம். பிரபாகரன், ஆர். சற்குணன், பி.முரளி, ஜே. திருச்செல்வம், கே. திருச்செல்வன், கே.குகன், ஏ. சாமுவெல் தினகரன், எம்.கணேசன், கே.சத்யராவ், எஸ்.விஜேந்திரன், பி.கே. சந்திரன்,என். மைக்கேல் ராஜ், டி.எஸ். கதிரவன், சி.தனபாலன், கே. செல்வம், டி.கமல், அப்துல் ரஹ்மான், எஸ். தட்சணாமூர்த்தி, எம்.செல்வா, எஸ். யேசுதாஸ், கே.கார்த்திகேசன், எஸ்.டி. கெவின், பி.ஜீவேந்திரன், எம்.முனியன், ஆர்.கேசவன், பி.ஏ.பாத்ரி, எல்.தமிழ்ச் செல்வன், எப். நிக்கோலஸ், எஸ்.கே. ஜெகதீசன், ஆர்.பரமேஸ்ராவ், எஸ்.காளிதாஸ், ஏ.கோபால்சாமி, கே.அருண்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS