2017-எஸ்பிஎம்  தேர்வு: வரலாற்று படத்தில் 17,000 பேர் ஃபெயிலா? மறுத்தது அமைச்சு

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.22- 2017 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு எழுதியவர்களில் 17,000  மாணவர்கள் வரலாற்றுப் பாடத்தில் தோல்வி கண்டு விட்டதாக வெளியான தகவலை  கல்வி அமைச்சு நிராகரித்தது.

சமூக வலைத் தளங்களில் இந்த வதந்தி மிக வேகமாகப் பரவி வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான எஸ்பி எம் தேர்வு குறித்து தேர்வு வாரியம் இதுவரை எத்தகைய அறிவிப்பையும் செய்யவில்லை. இத்தகைய வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்று கேட்டுக்கொண்டது.

தேர்வு முடிவுகள் தயாராகி விட்டால் பின்னர் எப்போது அது வெளியிடப்படும் என்பதை அமைச்சு அறிவிக்கும். இவ்விகாரம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அமைச்சுடன் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று அது குறிப்பிட்டது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS