முன்னாள் காதலியின் ஆபாசப்படங்கள் பதிவேற்றம்: சீவசங்கருக்கு முகநூல் தடை!

சமூகம்
Typography

கோத்தா கினாபாலு, பிப்.22- தன்னுடைய முன்னாள் காதலியின் ஆபாசப் புகைப்படங்களை தனது முகநூலில் பதிவேற்றம் செய்த  குற்றச்சாட்டின் பேரில்  வழக்கை எதிர்நோக்கி இருக்கும் 27 வயதுடைய சீவசங்கர் விக்னேஸ்வரன் என்பவர் இந்த வழக்கு முடியும் வரையில் முகநூலைப் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து  சீவசங்கர் விசாரணை கோரியுள்ள நிலையில், சமூக ஊடகத் தளத்திலிருந்து ஒதுங்கி இருக்கவேண்டும் என்று செசன்ஸ் நீதிபதி ஐனுல் ஷாரின் முகம்மட் உத்தரவிட்டார்.

இவரது வழக்கு ஆகஸ்டு 1ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. அது வரையில் பேரா, தம்புன் போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் இவர் ஆஜராக வேண்டும். மேலும் தன்னுடைய மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் அதற்கு முன்பதாக மாவட்டப் போலீஸ் தலைவரின் முன் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்௶உ 16ஆம் தேதி தன்னுடைய முகநூலில் முன்னாள் காதலியின் ஆபாசப்படங்களைப் பதிவேற்றம் செய்ததாக சீவசங்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டின் பல்லூடக மற்றும் தொலைத்தொடர்புச் சட்டத்தின் 233 (1)(ஏ) என்ற பிரிவின் கீழ்  ஜாலான் பண்டார் பாரு தம்புன் என்ற இடத்தில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இக்குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடுதல் பட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.தம்முடைய படங்கள்  பதிவேற்றம்  செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய முன்னாள் காதலி போலீசில் புகார் செய்திருந்தார்.  சீவசங்கருக்கு நீதிமன்றம் 5,000 ரிங்கிட்  ஜாமின் அனுமதித்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS