மகாதீர் கட்சிக்கு 'சிவப்பு சட்டை' ஜமால் 7 பில்லியன் நன்கொடை? (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.21- முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கட்சிக்கு நன்கொடை வழங்குவதாக கூறி சிவப்பு சட்டை இயக்கத்தின் தலைவர் ஜமால் யுனோஸ் இன்று வங்கியில் ரிம.7 பில்லியன் மதிப்புள்ள காசோலையைச் செலுத்த சென்றார்.

முன்னதாக, மகாதீரின் பெரிபூமி பெர்சத்து கட்சி பொதுத்தேர்தலுக்காக மக்களிடம் நன்கொடை வாங்குவதாக கூறிய டத்தோஶ்ரீ ஜமால் பின் யுனோஸ், தான் அவருக்கு 1,800 அமெரிக்க டாலரை வழங்குவதாக சிஐஎம்பி இஸ்லாமிக் வங்கிக்கு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜமால், இன்னும் பதிவு செய்யப்படாத மகாதீரின் கட்சிக்கு எப்படி வங்கியில் கணக்கு திறக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும், மகாதீர் பலரிடமிருந்து பணத்தை நன்கொடையாக பெறுவதாகவும் அதன் மூலம் பொதுத்தேர்தலின் போது வேட்பாளர்களை விலைக்கு வாங்கி விடுவார் என குற்றஞ்சாட்டினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS