கதவின் கைப்பிடியில் விரல் சிக்கியது; ராத்திரியில் நடந்த சம்பவத்தால் கலங்கிய அப்பா!

சமூகம்
Typography

பிந்துலு, பிப்.24- வீட்டு அறை கதவைத் திறக்கும் கைப்பிடியின் துளைப் பகுதி தனது 12 வயது மகனின் கையில் சிக்கி கொண்டதைக் கண்டு கலங்கி போன தந்தை தானாகவே தீயணைப்பு மையத்திற்கு மகனைக் கூட்டி சென்று காப்பாற்றினார்.

நேற்று இரவு 9 மணியளவில் பிந்துலு தீயணைப்பு மையத்திற்கு ஓடி வந்த ஆடவர் ஒருவர் தன் மகனின் கையில் கைப்பிடியின் துளைப்பகுதி சிக்கிக் கொண்டதாக கண்ணீரோடு கூறினார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் பையனின் கையில் சிக்கி இருந்த வளையம் போன்ற இரும்பை வெட்டி எடுத்தனர்.

மோதிரம் வெட்டும் கருவி மற்றும் இன்னும் சில கருவிகள் கொண்டு ஏறக்குறைய 40 நிமிடங்கள் போராடி அந்த இரும்பை விரலிருந்து அகற்றினர். மகனின் விரலிருந்து இரும்பு அகற்றப்பட்டதைப் பார்த்த பிறகே சிறுவனின் தந்தை சற்று சமாதானம் அடைந்தார்.

சுயமாக வெட்டிப் பார்க்காமல் தீயணைப்பு படையின் உதவியை நாடியதால் சிறுவனின் விரலில் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு படை பேச்சாளர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS