ஈப்போ: விபச்சார மையத்தில் போலீஸ் வேட்டை; ரகசிய பாதையில் தப்பிக்க முயன்ற பெண்கள் கைது!

சமூகம்
Typography

ஈப்போ, பிப்.24- இங்குள்ள கேளிக்கை மையத்தில் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் 19 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் சோதனையின்போது ரகசிய வழியாக தப்பிக்க முயன்ற அவர்களைப் போலீசார் வெற்றிகரமாக பிடித்தனர்.

இன்று பின்னிரவு இங்குள்ள பெர்சியரான் கிரீன்டவுன் பகுதியில் ஓப்ஸ் நோடா நடவடிக்கையின் கீழ் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 8 போலீஸ் அதிகாரிகளும் 34 குற்றச்செயல், சூதாட்ட தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் சோதனையில் ஈடுப்பட்டனர்.

நீண்ட நாட்கள் போலீசார் உளவு பார்த்த நிலையில் நேற்று பின்னிரவு 1.30 மணியளவில் அங்குள்ள கேளிக்கை மையத்தில் புகுந்து சோதனை நடத்தினர். போலீசின் வருகை கண்டு அங்கு ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 19 பெண்கள் ரகசிய பாதை வழியாக தப்பிக்க முயன்றனர்.

ஆனால், இப்பாதையை முன்கூட்டியே கண்டறிந்து விட்ட போலீசார் அப்பாதையை மூடி விட்டதால் 19 பெண்களும் தப்பிக்க முடியாமல் போலீசாரிடம் சிக்கினர். அவர்களுடன் அந்த மையத்தில் வேலை செய்த வங்காளதேச ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS