திருக்குறளுக்குப் பெருமைச் சேர்ந்த குறள் இசை நிகழ்ச்சி! (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.24- மனித வாழ்வின் சிறந்த வழிகாட்டியாக விளங்கும் திருக்குறளை இசை வடிவில் பாடி தமிழுக்குப் பெருமை சேர்த்தனர் நெல்லை ஶ்ரீ காந்திமதி சங்கீதப் பள்ளி மாணவர்கள். 

நேற்று மாலை தலைநகரில் உள்ள துண்கலை ஆலய மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு செனட்டர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி சிறப்பு வருகை புரிந்தார்.  இந்த நிகழ்ச்சியில் 60 திருக்குறள்கள் பாடல்களாக பாடப்பட்டன. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என மேடை முழுதும் நிறைந்திருந்த சங்கீத மாணவர்கள் மிக உற்சாகமாக 60 குறளையும் பாடி பார்வையாளர்களின் கரவோஷத்தைப் பெற்றனர்.

தன்னிடம் சங்கீதம் படிக்க வந்த மாணவர்கள் பலர் தமிழ் தெரியாது என்று கூறியது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் திருக்குறள் வழி தமிழைச் சொல்லி கொடுத்ததாகவும் அதுவே பின் குறள் இசையாக பரிணாமம் பெற்றது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான நெல்லை ஶ்ரீ காந்திமதி பாணி கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS