ரஜினியின் 'காலா': மார்ச் 1-இல் டீசர்; ஏப்ரல் 27 திரையரங்கில்!

சமூகம்
Typography

சென்னை, பிப்.24- பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் ஏப்ரல் மாதம் வெளிவரவிருக்கும் நிலையில் படத்தின் டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்படும் என தனுஷ் அறிவித்துள்ளார்.

எந்திரன் 2.0 படத்திற்கு முன்னமே காலா படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. முதலில் ஏப்ரல் 14ஆம் தேதி படம் வெளியீடு என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி திரையரங்கிற்கு வருவதாக படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அறிவித்தார்.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தபோது இப்படம் கண்டிப்பாக சர்ச்சையை உண்டாக்கும் என பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், படத்தின் டீசர் மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்படும் என தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.

ரஜினி அரசியலில் ஈடுப்படுவதற்கு முன்னதாக நடித்த இப்படம் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முக்கியமான படமாக அமையும் என்கின்றனர் விமர்சகர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS