நாடற்றவர்களாக தவிக்கும்  சிறார்கள்!  தீர்வு எங்கே?- சுரேந்திரன் கேள்வி

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 12- எதிர்காலமே ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் நாடற்ற பிரஜைகளாக இருக்கும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு உள்துறை அமைச்சு தீர்வுகாண வேண்டும் என்று மனித உரிமை வழக்கறிஞரான என்.சுரேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இத்தகைய நிலை நீண்ட காலமாக இடம் பெற்று வருகிறது. இதுவரைக்கும் தீர்வுகாண எதுவும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. இளம் மலேசியா சிறார்களுக்கான குடியுரிமை தவறுதலாக மறுக்கப்பட்டு வருகிறது என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். 

மலேசியாவில் பிறந்த பல குழந்தைகளுக்குத் தேசிய பதிவு இலாகா மற்றும் உள்துறை அமைச்சு உள்பட அரசாங்கத்தினால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக சுரேந்திரன் சொன்னார்.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி குழந்தைகள் குடியுரிமையைப் பெற உரிமை உள்ளவர்கள். அரசியல் அமைப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றி நடக்காமல் அதிகாரிகள் சட்டத்தை மீறி வருகிறார்கள். 

குடியுரிமை இல்லாமல் நாடற்ற பிள்ளைகளாக இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் ஆவணங்கள் இல்லாததால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் என்று சுரேந்திரன் சொன்னார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS