ஜூன் 8-இல் அன்வார் விடுதலையா? தேதிகள் மாறலாம் -துணைப்பிரதமர்

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 12- எதிர்வரும் ஜூன் 8 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வர் இப்ராஹிம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றாலும் இந்தத் தேதியில் மாற்றங்கள் நிகழலாம் என்று  துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

சிறைச்சாலை இலாகா வழக்கில் அன்வாரின் விடுதலை  ஜூன்- 8 என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது. 

1955ஆம் ஆண்டின் சிறைச்சாலை சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டில் சிறைச்சாலை ஒழுங்கு விதிச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அன்வாரின் சிறைத்தண்டனையில் மூன்றில் ஒருபகுதி தள்ளுபடி செய்யப்பட்டு ஜூன் 8ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என மக்களவையில் பிகேஆர் உறுப்பினர் கூய் சியாங் லெங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தப்போது அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இருப்பினும், இந்தத் தேதியில் இன்னும் மாற்றங்கள் வரக் கூடிய சாத்தியம் இருக்கிறது. சிறை விதிமுறைகளை ஒருவர் மீறும் பட்சத்தில், முன்பு தண்டனைக் குறைக்கப்பட்டது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS