கமல் - ரஜினியுடன் காங்கிரஸ் கூட்டணியா? -திருநாவுக்கரசர் நேர்காணல் -(VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச். 12- தமிழக அரசியலில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் நிலையில் இவர்களின் கட்சிகளுடன்   காங்கிரஸ் கட்சி கூட்டணி  வைத்துக் கொள்வது என்பது எதிர்கால அரசியல் சூழலைப் பொறுத்த விஷயம் என்று தமிழக காங்கிரஸ் தலைவரான சு. திருநாவுக்கரசர்  தெரிவித்தார்.

மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள மூத்த அரசியல்வாதியான திருநாவுக்கரசர்  இன்று'வணக்கம் மலேசியா'வுக்கு அளித்த சிறப்புக் காணொளி நேர்காணலின் போது மேற்கண்டவாறு சொன்னார்.

காங்கிரசைப் பொறுத்தவரையில் அரசியல் கட்சிகளைத் தொடங்குவது அவரவர்களின் உரிமை என்றே கருதுகிறது. அதைத் தடுக்க அல்லது கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

நண்பர்கள் கமல்ஹசான் மற்றும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆகியோரின் அரசியல் பிரவேசத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. கட்சி ரீதியாக, அமைப்பு ரீதியாக செயல்படுவது அவரவர் உரிமை. 

ஆனால், இறுதி முடிவை எடுக்க வேண்டியவர்கள் மக்கள்.  அவர்களுக்கு யார் வேண்டும், யாரைப் பிடித்திருக்கிறது? என்பது  மக்களின் கையில் உள்ளது என்று  திருநாவுக்கரசர் தெரிவித்தார். மேலும், இப்போதைய நிலையில் தங்களின் கூட்டணி திமுகவுடன் தான் என்று  அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே 3ஆவது கட்சியாக விளங்கிய காங்கிரசின் நிலை, இந்த சினிமா பிரபலங்களின் அரசியல் பிரவேசத்தினால் பாதிக்குமா? என்பது குறித்தும் காணொளி பேட்டியில் அவர் கருத்துரைத்தார். 

தமிழகக் காங்கிரசில்  உட்கட்சி மோதல் இருந்தாலும் தாம் தலைமையேற்ற பின்னர் கணிசமான அளவில் சுமூகமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.

மேலும்  மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா, தனது ஆட்சிக்கு உட்படாத மாநிலங்களில் அரசு இயந்திரங்களை துஷ்பிரயோகம் செய்து பலரின் எதிர்ப்புக் குரலை ஒடுக்கப் பார்க்கிறது. 

அந்த அடிப்படையில் தான் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசிய வந்த மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அண்மையில் கைது செய்யப்பட்ட விவகாரம் அமைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது என்று அவர் இந்த நேர்காணலில் விரிவாகக் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS