4 வயது சிறுமியின் தலையில் படுகாயம்; 56 வயது ஆடவனைத் தேடும் போலீஸ்!

சமூகம்
Typography

அம்பாங், மார்ச் 13- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 4 வயது இந்தோனேசிய சிறுமியைக் கொடுமைப்படுத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட காரணமாக இருந்த 56 ஆடவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 11ஆம் தேதி அம்பாங் மருத்துவமனையில் 4 வயது சிறுமி சுயநினைவு இன்றி சேர்க்கப்பட்டாள். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளின் தலையில் பலத்த காயம் இருப்பதைக் கண்டுப் பிடித்தனர். 

பலமான பொருளால் அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டு அதிகமான ரத்தம் வெளியேறியதாக மருத்துவமனை அதிகாரி கூறினார். இச்சம்பவத்திற்கு காரணமான 56 வயது ஆடவன் மீது அந்த அதிகாரி போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆடவரைத் தேடி வருவதாக அம்பாங் ஜெயா ஓசிபிடி ஹம்சா அலியாஸ் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இச்சம்பவம் சிறார் கொடுமை 2001 சட்டம் செக்ஷன் 21(1)(எ) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS