பெற்றோர் அலட்சியம்; காரில் சிக்கி கொண்ட ஒன்றரை வயது குழந்தை!

சமூகம்
Typography

பிந்துலு, மார்ச் 13- ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஒன்றரை வயது குழந்தை காரில் சிக்கி கொண்டதைக் கூட அறியாமல் பெற்றோர் அலட்சியமாக இருந்த சம்பவம் பிந்துலுவில் நடந்துள்ளது.

இங்குள்ள தாமான் சின் லீயில் உள்ள வீடு ஒன்றில், நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் குழந்தை ஒன்று காரில் சிக்கி கொண்டது. இதனைக் கூட அறியாமல் ஏறக்குறைய 1 மணிநேரம் கழித்தே தன் மகள் அருகில் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். 

பின்னர் வீடு முழுவதும் தேடியும் பிள்ளை கிடைக்காத நிலையில், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே தன் குழந்தை இருப்பதைக் கண்டு தாய் அலறினார்.உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முனைந்த போது, கார் கதவு பூட்டி இருந்தது தெரியவந்தது. எவ்வளவோ முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை.

காரின் உள்ளே போதுமான காற்று இல்லாததாலும் வெப்பத்தினாலும் அக்குழந்தை பலவீனமாக இருந்ததை அடுத்து, சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், விஷேச கருவி கொண்டு காரின் கதவைத் திறந்து குழந்தையைக் காப்பாற்றினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS