கோமதியை தாக்கி, கத்தியால் வெட்டிய கணவனும் சகாக்களும் கைது!

சமூகம்
Typography

கிள்ளான், மார்ச்.13- இங்கு தாமான் கிள்ளான் ஜெயாவில் தாம் வேலை செய்யும் இடத்திற்கு வெளியே குடும்ப மாது ஒருவரை கொடூரமாக தாகி வெட்டுக்கத்தியால் வெட்டிய பரபரப்பான சம்ப்[அவம் தொடர்பாக 4 சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 4 பேரில் அந்த மாதுவின் கணவர் என்று நம்ப்பப்படும் நபரும் அடங்குவார்.    கோமதி இராமச்சந்திரன் (வயது 42) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மாதுவின் வேலையிடத்திற்கு வெளியே காரில் வந்த கோமதியின் கணவனும் அவருடன் வந்த ஆசாமி ஒருவனும் சேர்ந்து கோமதியை தாக்கினர். 

அவரை காருக்குள் இழுத்துப் போட முயன்ற போது கடுமையாக போராடிய கோமதியை வெட்டுக் கத்தியைக் கொண்டு தாக்கிய பின்னர் அவரைக்  காருக்குள் இழுத்து போட்டுக் கொண்டு போய்விட்டனர். 

இந்தக் கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பான  காணொளி ஒன்று சமூக வலைத் தளங்களில் படுவேகமாக பரவி மக்கள் மத்தியில் பெரும்மதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

காரில் கடத்திச் சென்ற அவர்கள், பின்னர் கோமதியை சிரம்பான் மருத்துவமனையில் கொண்டு வந்து விட்டு விட்டு  தப்பிச் சென்று விட்டனர்.  உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீசார், அந்த இருவரையும் வலைவீசித்தேடி வந்தனர்.

நேற்ரு கைது செய்யப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளிடம் இருந்து கார், வெட்டுக் கத்தி மற்றும் பல கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக தென் கிள்ளான் ஓசிபிடி துணை ஆணையர் ஷம்சூல் அமார் ரம்லி தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS