'உப்சி'யில்  6-ஆம் ஆண்டாக  நாடக விழா!  உயர்கல்வி மாணவர்களுக்கு அழைப்பு!

சமூகம்
Typography

தஞ்சோங் மாலிம், மார்ச்.13- கடந்த ஐந்து ஆண்டுகளாக சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகமான உப்சியில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும்  'நாடகச் சுடர்' எனும் நாடக விழா , இவ்வாண்டு ஆறாவது முறையாக புதிய தேடலுடன் மீண்டும் நடத்தப்படுகிறது.

'நாடகச் சுடர் 6' எனும் இப்போட்டி,  எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் தேதி  சனிக்கிழமை  காலை 8.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக ( உப்சி) மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

மாணவர்களிடையே உள்ள நாடகக் கலையைத் திறனை வளர்ப்பது, மறக்கப்பட்ட இலக்கிய நாடகத்தை மீட்டெடுப்பது, மற்றும் மாணவர்கள் நடிப்புத் துறையில் மிளிர்வதற்கு வாய்ப்ப்புகளை உருவாக்குவது  ஆகியவையே வளர்தமிழ் மன்றம் ஏற்று நடத்தும் இந்த இலக்கிய நாடக விழாவின் முக்கிய நோக்கங்களாகும். 

நாடகச் சுடர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சிறப்பான ரொக்கப் பரிசு தொகை வழங்கப்படும். முதலாம் நிலை பரிசு, ரிம. 2,000, இரண்டாம் நிலை பரிசு ரிம. 1,200, மூன்றாம் நிலை பரிசு ரிம. 800 வழங்கப்படவுள்ளது. 

மேலும், சிறந்த வசனத்திற்காக  250 ரிங்கிட்டும், சிறந்த படைப்பாளருக்கு  100 ரிங்கிட்டும் சிறந்த மேடை அலங்காரம்  100 ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளன.

“ஒவ்வொரு வருடமும் இலக்கிய நோக்கத்தை விட்டு பிறழாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடகச் சுடர் போட்டியில் பங்கேற்பதற்கு, கீழ்கண்ட முக்கியமான விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்.

உயர்கல்வி கூட மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில கலந்து கொள்ள முடியும். ஒரு குழுவில் 10 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். கொடுக்கப்பட்ட தலைப்புகளை மட்டுமே தெரிவு செய்து  மாணவர்கள் நடிக்க வேண்டும். மேலும், தமிழ்த் திரைப்பட வசனங்களை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.  மேல் விபரங்களுக்கு கவிவர்மா (016 - 9786554).

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS