ஆபத்து நேரத்தில் போலீஸ் உதவாதது ஏன்? முகநூலில் அழுது புலம்பிய இந்திய பெண்! (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 13- தன்னைக் கார் ஒன்று பின் தொடர்வதைக் கண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்ற இந்திய மாதுவை போலீஸ் அதிகாரி உள்ளே விடாதது குறித்து அந்த மாது முகநூல் காணொளியில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

இன்று மதியம் முதல் முகநூலில் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் பெண் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தான் தன் மகனைப் பயிற்சி முடிந்து அழைத்துக் கொண்டு செல்லும்போது பிஎம்டபள்யூ ரக கார் ஒன்று ப்ன் தொடர்ந்து வந்ததாக ஆங்கிலத்தில் கூறுகிறார்.

   ###காணொளி: நன்றி Yesbook

சம்பந்தப்பட்ட கார் வெகுநேரம் தன் காரைப் பின் தொடர்ந்து வந்ததை அடுத்து, போலீசைத் தொடர்பு கொண்ட பிறகு, நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றதாக அம்மாது கூறுகிறார்.

ஆனால், போலீஸ் நிலையத்தின் நுழைவாயிலில் காவலில் இருந்த அதிகாரி தன்னை உள்ளே விடவில்லை என்றும் இம்மாதிரியான பாதுகாப்பற்ற நாட்டிலா நாம் வாழ்கிறோம் என்றும் அம்மாது அழுது கொண்டே காணொளியில் கூறியுள்ளார்.

இச்சம்பவம் எப்போது, எங்கே நடந்தது? காணொளியில் வரும் மாது யார்? என்ற விவரங்கள் முழுமையாக தெரியாத நிலையில், முகநூலில் 'Yesbook' என்ற அகப்பக்கம் அந்த காணொளியைப் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த காணொளியைப் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS