பிரபல எழுத்தாளர், வானொலி அறிவிப்பாளர் வி. தீனரட்சகி காலமானார்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச்.13- முன்னாள் வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளரும் பிரபல எழுத்தாளருமான வி. தீனரட்சகி   இன்று நண்பகல் 12.40 அளவில் இயற்கை எய்தினார்.  

1960 -களிலும்   இறுதியிலும்  1970 -களிலும் வி. தீனரட்சகி எழுதிய  சிறுகதைகள்- வானொலி நாடகங்கள் மிகவும் பிரபலமாக பரபரப்பாகப் பேசப்பட்டன. 

வானொலி நாடக இலக்கியத்தில் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் மேலிட வாசகர்களைக் கவர்ந்து முத்திரை  எழுத்தாளினி  வி. தீனரட்சகி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக தமிழ் நாளிதழ்களின்  ஞாயிறு பதிப்புகளில் தொடர் கதைகள்  பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த எழுத்தாளராக விளங்கினார்.

வானொலியில் எண்ணற்ற  நாடகங்கள் எழுதியுள்ளார்.   வனிதையர் சோலை இவரது மேற்பார்வையில் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வானொலி நாடகங்களிலும் நடித்தவர்  இவர். . மெல்லிய குரல் வளம் கொண்ட இவரது நடிப்பு  அன்றைய வானொலி நேயர்கள் பலரைக் கவர்ந்தது. 

பிரபல வானொலி அறிவிப்பாளரும்  நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சந்திரா சூரியாவின் மூத்த சகோதரி தீனரட்சகி என்பது குறிப்பிடத்தக்கது.

## பட விளக்கம்: வனிதையர் சோலை நிகழ்ச்சியை மிகச் சிறப்புற தயாரித்து வழங்கியவர் தீனா. மேலே உள்ள படத்தில் வனிதையர் சோலை நிகழ்ச்சியை தீனா பதிவு செய்கிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற திருமதி சுசீலா திருச்செல்வம், சுசீலா ஜெகநாதன், சுபத்ரா ராஜ்லு  உள்ளிட்டோர் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

 

  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS