இந்திய பெண்ணின் கண்ணீர் காணொளி எதிரொலி; 3 இளைஞர்கள் கைது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 14- தன்னை கார் ஒன்று பின் தொடர்ந்து வந்ததை அடுத்து, போலீஸ் நிலையத்தில் தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என இந்திய மாது வெளியிட்ட காணொளிக்கு எதிரொலியாக, சம்பந்தப்பட்ட காரில் பயணித்த மூன்று இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.

தன் மகனைப் பயிற்சி முடிந்து காரில் ஏற்றி கொண்டு வரும் வழியில், பிஎம்டபள்யூ ரக கார் ஒன்று பின் தொடர்ந்து வந்ததால் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு தேடி சென்ற தமக்கு போலீஸ் நிலையத்தில் முறையான சேவை வழங்கப்படவில்லை என்று கோகி சின்னையா (வயது 41) என்ற மாது முகநூல் காணொளி ஒன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காரில் பின் தொடர்ந்த மூன்று இளைஞர்களையும் போலீசார் நேற்று இரவு 8 மணிக்கு கைது செய்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஆணையர் மஸ்லான் லாஜிம் கூறினார்.

எஸ்பிஎம் முடித்த மாணவர்களான மூவரும் மேல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரின் தந்தையின் கார் அந்த பிஎம்டபள்யூ கார் என்றும் மஸ்லான் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS