தந்தையின் கனவை நனவாக்கிய கவிபிரியா; எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி!

சமூகம்
Typography

சிப்பாங், மார்ச் 14- தன் தந்தை லோரி ஓட்டுனராக இருந்தாலும் கல்வியில் சிறந்து விளங்கிய கவிபிரியா மணிமாறன் தன் தந்தையின் கனவை நிறைவேற்றினார். எஸ்டிபிஎம் தேர்வில் பள்ளியில் சிறந்த மாணவர்களில் ஒருவராக கவிபிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தஞ்சோங் சிப்பாட்டைச் சேர்ந்த கவிபிரியாவின் தந்தை மணிமாறன் மலையாளம் லோரி ஓட்டுனராக இருந்தாலும் தன் மகள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இல்லத்தரசியான் கவிபிரியாவின் தாயார் லெட்சுமி இவருக்கு உதவியாக இருக்க, கவிபிரியா தேர்வில் 3.42 புள்ளிகள் பெற்று சிறந்த மாணவியாக வலம் வருகிறார்.

சுங்கை பீலேக் இடைநிலைப்பள்ளி மாணவரான கவிபிரியா, தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS