கோலாலம்பூரில் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச். 14- முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு  எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெள்ளி, சனி  மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மலாயா பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது.

மலாயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ந்நடதுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.  தனிழ் இலக்கியத்தின் சிறப்புக் கூறுகள் சார்ந்த பல அனைத்துலக மாநாடுகள் நடந்துள்ள போதிலும்தமிழ்க் குழந்தை இலக்கியம் சார்ந்த மாநாடு எதுவும் நடத்தப்படவில்லை.

தமிழில் சரிந்து வரும் குழந்தை இலக்கியத்தை தூக்கி நிறுத்தும் நோக்கோடு இந்தமுதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இம்மாநாட்டுக்கான அடிப்படை நோக்கங்கள் வருமாறு:

##  நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல்.

## கற்றல் கற்பித்தல் முறைகளில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் போன்ற குழந்தை இலக்கியங்களைப் பயன்படுத்தும் உத்திகளை ஆராய்தல்.

## கணினி யுகத்திற்கு  ஏற்ற முறையில் குழந்தை இலக்கிய வடிவம், உள்ளடக்கம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவந்து, மின்னூல் வடிவில் இப்படைப்புகள் வருதலை ஊக்கப்படுத்தல்.

## புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் நிலையை ஆராய்தல். பள்ளிகளிலும், பள்ளி நூலகங்களிலும் இடம்பெற வகைசெய்தல்.

## குழந்தைகளின் அக வளர்ச்சியைத் தூண்டும் தரமான குழந்தை - சிறுவர்" இலக்கிய நூல்கள் உருவாக ஊக்கம் அளித்தல்.

## பள்ளிகளிலும் வீட்டிலும் குழந்தைகள் தாமே வாசித்து மகிழும் பழக்கத்தை ஏற்படுத்தும் வழிகளை ஆராய்தல். ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

மேலும் பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

** நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டும் வழிமுறைகள்.

** நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களும் புதிய குழந்தைப் பாடல்களும்.

** குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள், காவியங்கள் - ஒரு நோக்கு.

** அழ . வள்ளியப்பாவிற்கு முன்பும் பின்பும்.

** கணினிக் காலத்திற்கேற்ற குழந்தை இலக்கியத் தோற்றத்திற்குரிய வழிவகைகளை ஆராய்தல்.

** புலம் பெயர்ந்த நாடுகளில் குழந்தை இலக்கியத்தின் நிலை.

** கற்றல் கற்பித்தலில் கவிதையைப் பயன்படுத்தும் உத்திகள்.

** தமிழ் மழலையர்க்கான கதை, கட்டுரை, நாடக நூல்கள் - ஒரு பார்வை.

** உலக மொழிகளில் குழந்தை இலக்கியம்.

** குழந்தை இலக்கியங்களில் உடல் நலம், மருத்துவம் தொடர்பான செய்திகள்.

** வானொலி, தொலைக்காட்சி, திரைத் துறைகளில் குழந்தைமை பதிவுகள்.

** குழந்தைகள் தங்களுக்காகத் தாங்களே படைத்துக் கொள்ளும் இலக்கியம்.

** நன்னெறி, பண்பாட்டியல் நோக்கில் குழந்தை இலக்கியம்.

** குழந்தைகளும் குறும் படங்களும்.

ஆய்வுக் கட்டுரைகள்  20 மணித் துளிகளுக்குள் படிக்கப்படும் வண்ணம் அமைதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை 150 சொற்களுக்கு மேற்போகாதவாறு ஒருங்குறி (UNICODE)முறையில் தட்டச்சு செய்து (1.5 இடைவெளி ; 12 புள்ளி எழுத்தளவு ) 31.03.2018 ஆம் நாளுக்குள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

(மின்னஞ்சல் :info@childtamil.com) / வலைத்தளம் :www.childtamil.com) கட்டுரைத் தேர்வுக்குழுவின் முடிவுகள் தொடர்புடைய பேராளர்களுக்கு 15.04.2018 ஆம் நாளுக்குள் தெரிவிக்கப்படும்.

முழு வடிவம் கொண்ட ஆய்வுக் கட்டுரையை (A4 -தாளில் ) 6 பக்கங்களுக்கு மிகாதவாறு தட்டச்சு செய்து 30.04.2018 ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவினருக்கு கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுமார் 400 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. இம்மாநாட்டில் ஆஸ்திரிரேலியா, கனடா, டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, ஶ்ரீ லங்கா, சிங்கப்பூர், மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா, மாலேசியா ஆகிய நாடுகளிருந்து பேராளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இம்மாநாடு வெற்றிபெற அரசுசார் - சார்பற்ற நிறுவனங்கள், தனியார்த் துறை, கொடைநெஞ்சர், பொதுமக்கள், தமிழார்வலர் ஆகியோரிடமிருந்து ஆதரவையையும் நன்கொடையையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மேல் விபரங்களுக்கு பி.கே.சண்முகம் (019 3252580) மற்றும் முரசு நெடுமாறன்( 012 9117855 ) ஆகியோருடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(மின்னஞ்சல் :This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) / வலைத்தளம் :www.childtamil.com) கட்டுரைத் தேர்வுக்குழுவின் முடிவுகள் தொடர்புடைய பேராளர்களுக்கு 15.04.2018 ஆம் நாளுக்குள் தெரிவிக்கப்படும்.

முழு வடிவம் கொண்ட ஆய்வுக் கட்டுரையை (A4 -தாளில் ) 6 பக்கங்களுக்கு மிகாதவாறு தட்டச்சு செய்து 30.04.2018 ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவினருக்கு கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுமார் 400 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. இம்மாநாட்டில் ஆஸ்திரிரேலியா, கனடா, டென்மார்க், இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, ஶ்ரீ லங்கா, சிங்கப்பூர், மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா, மாலேசியா ஆகிய நாடுகளிருந்து பேராளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இம்மாநாடு வெற்றிபெற அரசுசார் - சார்பற்ற நிறுவனங்கள், தனியார்த் துறை, கொடைநெஞ்சர், பொதுமக்கள், தமிழார்வலர் ஆகியோரிடமிருந்து ஆதரவையையும் நன்கொடையையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மேல் விபரங்களுக்கு பி.கே.சண்முகம் (019 3252580) மற்றும் முரசு நெடுமாறன்( 012 9117855 ) ஆகியோருடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS