பினாங்கில் போதைப் பொருள் கும்பல் முறியடிப்பு!

சமூகம்
Typography

ஜார்ஜ்டவுன், மார்ச். 22- இங்கு ஜாலான் மாஜிட் நெகிரியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் போதைப் பொருள்களைத் தயாரிக்கும் சோதனைக் கூடத்தை நடத்தி வந்த கும்பலை பினாங்கு போலீசார் முறியடித்தனர்.

மெத்தா பெத்தாமைன் மற்றும் எக்ஸ்டாசி ஆகிய போதை மாத்திரைகளை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த 4 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர் என்று மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஏ. தெய்வீகன் தெரிவித்தார்.

இந்தச் சோதனைக் கூடத்தில் மொத்தம் 16 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள்களும் அதனைத் தயாரிக்கத் தேவையான அடிப்படைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

மெத்தா பெத்தாமைன் எண்ணெய், பல போத்தல்களில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 14 லட்சம் ரிங்கிட் ஆகும் என்று அவர் விளக்கினார்.

இங்கு இந்தப் போதைப் பொருள் தயாரிப்புக் கூடம், செயல்பட்டு வருவது குறித்து கண்டறிய தொடர்ந்து தாங்கள் கண்காணிப்பை மேற்கொண்டதன் பயனாக நான்கு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தக் கும்பலுக்கு இதர சில போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறியும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS