பள்ளிகளில் மாணவர் குற்றச்செயல்கள்; 6,917 சம்பவங்கள் பதிவு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 22- கடந்த ஆண்டில் மட்டும்  நாடு தழுவிய அளவில் பள்ளிகளில் குற்றவியல் பின்னணியைக் கொண்ட 6 ஆயிரம் கட்டொழுங்குச் சம்பவங்கள்  நடந்திருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களின் கட்டொழுங்கு பிரச்சனை தொடர்பான அமைச்சின் பதிவுகள் காட்டும் கணக்குப்படி, ஆரம்பப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 6,917 சம்பவங்கள் நடந்துள்ளன என்று அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

இவற்றில் 5,934 சம்பவங்கள் இடைநிலைப்பள்ளிகளில் நடந்துள்ளன 983 சம்பவங்கள் ஆரம்பப்பள்ளிகளில் பதிவாகி உள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அமைச்சின் சார்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பள்ளிகளில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய செத்தியாவங்சா தே.மு. உறுப்பினர் டத்தோ கைமட் பவ்ஷி,  நன்னெறிக் கல்விக்கான பாடத்திட்டங்கள் இன்னமும் பொருத்தம் உள்ள வகையில் அமைந்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டில் நன்னெறிக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அமைச்சு உருமாற்றம் செய்துள்ளது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் படிவம் ஆகிய வகுப்புக்களை இலக்காகக் கொண்டு இந்த உருமாற்றம் திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று அமைச்சு பதில் தெரிவித்தது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS