நாற்காலி விழுந்து சதீஸ்வரன் மரணம்: கைதான பெண் ஜாமீனில் விடுதலை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச்.22- இங்கு பந்தாய் டாலமிலுள்ள பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பின் 21 ஆவது மாடியிலிருந்து நாற்காலியை தூக்கி வெளியே வீசியதால், கீழ்த்தளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது  மாணவன் எஸ். சதீஸ்வரனின் தலையில் விழுந்து,  மாண்ட சம்பவத்தில் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் போலீசாருக்கு உதவ முன் வர வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் வாஷிம் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தன்னுடைய தாயார் கஸ்தூரிபாயுடன் பேசிக் கொண்டே, கீழ்த் தளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரும்பு நாற்காலி  ஒன்று  21 ஆவது மாடியிலிருந்து  சதீஸ்வரனின் தலையில்  விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.  அந்த நாற்காலியை தூக்கி வீசிய சந்தேகத்தின் பேரில் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து, விசாரிக்கப்பட்ட பின்னர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப் பட்டுள்ளார் என்று டத்தோஶ்ரீ மஸ்லான் வாஷிம் சொன்னார்.

இராசயனத் துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இவர் கடந்த 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். விசாரணையின் போது அவரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

இந்தக் குற்றச் சம்பவம் குறித்து அந்தப் பெண் எத்தகைய ஒப்புதல் வாக்குமூலமும் தரவில்லை. தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டு ள்ளார் என்றார் அவர். சதீஸ்வரனின் மரணச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அவர்கள் உதவ முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS