போலி முட்டைகள்;  மக்கள் மத்தியில் அதிர்ச்சி! -(VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 22- 'போலி அரிசி', 'போலி முட்டைக்கோஸ்'  போலி முட்டை விற்பனை என்றெல்லாம் அண்மைய காலமாக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

போலி முட்டை உருவாக்கும் விதம் குறித்த காணொளி ஒன்று முகநூலில் அண்மையில் காலமாக பரவலாகி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயற்கை முட்டை போலவே போலி முட்டை உருவாக்கப்படுகின்றன. வெள்ளை மற்றும் மஞ்சள் திரவத்தை உருவாக்கி பிளாஸ்டிக் முட்டை வடிவத்தில் போன்ற புட்டியில் அடைத்து வைக்கின்ற போல் காணொளியில் இடம்பெற்று இருக்கிறது. 

இந்தக் காணொளி இந்தோனியாவில் வெளியானது. அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. இதனால், மக்கள் முட்டை வாங்குவதற்கே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS