பணிப்பெண் கொடுமை: தலைமறைவான டத்தின் ரோஷித்தா கடப்பிதழ் முடக்கம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 22- இந்தோனேசிய வீட்டில் பணிப்பெண் ஒருவரை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்திய வழக்கில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மறுஆய்வு விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்ட  டத்தின் ரோஷித்தா முகம்மட் அலி, வெளிநாட்டுக்கு தப்பாமல் தடுக்க கடப்பிதழ் முடக்கப்பட்டது. 

அவரது கடப்பிதழ் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தபாரர் அலி தெரிவித்தார்.

ஷாஆலம் நீதிமன்றம் விடுத்த உத்தரவின் அடிப்படையில், அவருடைய கடப்பிதழ் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல இயலாது என்றார் அவர்.

மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் ஈடுப்பட்டாரா? என்பதைக் கண்டறியும் பணியை தாங்கள் மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சுயாந்தி என்ற பணிப்பெண்ணை, காய்கறி வெட்டும் கத்தி, இரும்புக் கம்பி, குடைக் கம்பி ஆகியவற்றினால் அடித்துப் படுகாயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் டத்தின் ரோஷித்தாவுக்கு ஷாஆலம் செசன்ஸ் நீதிமன்றம், 20 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத்தில் 5 ஆண்டுகள் நன்னடத்தை கட்டுப்பாடு விதித்து தீர்ப்புக் கூறியது.

பணிப்பெண்ணுக்கு இழைத்த கொடுமைக்கு ஏன் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை எனக் கோரி, இணையத்தளம் ஒன்று கையெழுத்து வேட்டை நடத்தி 70 ஆயிரம் பேரில் கையெழுத்துக்களை பெற்றது.

இதனிடையே டத்தின் ரோஷித்தாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என்பதால் தண்டனை மறுஆய்வு செய்யக் கோரி பிராசிகியூஷன் தரப்பு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

மார்ச் 21ஆம் தேதி மறுஆய்வு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் டத்தின் ரோஷித்தா தலைமறைவானார். அவருக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்து அரசு மலேசிய விமானப் படையச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் ஒருவர் தலைமறைவானார்.

இந்நிலையில் டத்தின் ரோஷித்தா, நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய, அவரது கடப்பிதழ் முடக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS