ஜொகூர் இளவரசர் ‘ஸ்பான்சரா?’ பொய்ச் செய்தியால் பரபரப்பு

சமூகம்
Typography

பொந்தியான், ஏப்ரல். 12 –ஜொகூர் பொந்தியானிலுள்ளஎக்கோன் சேவ்பேரங்காடியில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள ஜொகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்ஸ்பான்சர்செய்கிறார் என்றொரு போலியான செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் இந்தப் போலி செய்தியால், சம்பந்தப்பட்ட பேரங்காடியில் மக்கள் கூட்டம் திரண்டது. மேலும் ஏற்கெனவே அங்கிருந்த பலர், தள்ளு வண்டிகளில் பொருள்களை வாங்கி நிரப்பத் தொடங்கி விட்டனர்.

ஆனால் இதுவொரு பொய்யான செய்தி எனத் தெரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

நேற்று முன்தினம் தேப்ராவிலுள்ள ‘AEON’ பேரங்காடிக்கு திடிரென வருகை புரிந்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அங்கிருந்த மக்களுக்கு ஓர் அறிவிப்பைச் செய்தார். உங்களுக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டணத்தை நான் செலுத்தி விடுகிறேன் என்ற அறிவிப்புத் தான் அது.

அதன்படி மக்கள் பத்து நிமிட இடைவெளிக்குள் ஏராளமான பொருள்களை அள்ளிக் குவிந்தனர். அதற்கான கட்டணத்தை இளவரசர் செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

 

கிட்டத்தட்ட 10 லட்சம் ரிங்கிட் அவர் செலுத்தியதாக கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து பொந்தியானிலுள்ள பேரங்காடியிலும் ஜொகூர் இளவரசர் அத்தகைய வாய்ப்பை மக்களுக்கு வழங்குகிறார் என சமூக ஊடகங்களில் புரளியை கிளப்பி விட்டதால் இந்த அமளி அங்கு ஏற்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS