உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டி! மலேசிய வீரர்கள் அபார வெற்றி!

சமூகம்
Typography

கோபன்ஹேகன், ஏப்ரல் 12-  ஆறாவது உலகத் தமிழர் பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு டென்மார்க்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நான்கு பிரிவுகளில் மலேசிய வீரர்கள் அபார வெற்றிகளைக் குவித்தனர்.

இந்த இரண்டு நாள் பேட்மிண்டன் போட்டியில் ஹாலந்து நார்வே, பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், போர்த்துக்கல், ஶ்ரீலங்கா, அமேரிக்கா,பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொண்டன.

சுமார் 200க்கும் அதிகமாக தமிழ் பேட்மிண்டன் ஆட்டக்காரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட வீணா பெரியசாமி, ஜெகன், சூரியா, ஏஞ்சலா, விக்னேஷ் மற்றும் ராஜ் ஆகியோர் 4 வெவ்வேறு பிரிவுகளில் சாம்பியனாக வாகைசூடி மலேசியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

கடந்த ஆண்டு கனடாவில்  நடந்த போட்டியில் வீணா பெரியசாமி சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது இங்கு குறிப்பிட்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 7ஆவது உலகத் தமிழர் பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS