மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் ‘இந்து புத்தாண்டு 2018’ விழா

சமூகம்
Typography

கோலாலம்பூர்,ஏப்ரல்.13- பிறக்கவிருக்கும் விளம்பி ஆண்டை முன்னிட்டு மலேசிய இந்து சங்கம், இந்துப் புத்தாண்டு 2018 எனும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு இந்து சங்கம் கேட்டு கொள்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, தலைநகரில் லிட்டில் இந்தியா என்றழைக்கப்படும் பிரிக்பீல்ட்சில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விழா நடக்கவுள்ளது. இவ்விழாவில் நாதஸ்வர இசைக்கச்சேரி, திருமுறை, தேவார படைப்புகள், பல்லாங்குழி மற்றும் உரி அடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் மோகினி ஆட்டம், குச்சிப்புடி, பரதநாட்டியம் போன்ற கண்கவர் நடனங்களும் இடம்பெறும். அதோடு கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு இலவசமாக பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுவதோடு அதன் செய்முறைகளும் செய்துக் காட்டப்படும்.

இவ்விழாவில் பிரதமர் துறை அமைச்சர் டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ பங்கலிமா ஜோசப் குரூப் சிறப்பு வருகை புரியவுள்ளார். இவருடன் கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோ லோக பாலாவும் வருகை புரியவுள்ளார். 

மேலும், சாதனை புரிந்த மற்றும் சமூக சேவையாற்றிய ஐவருக்கு இந்த விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதில் மூவருக்கு ஶ்ரீ அர்ஜூனா விருதும் இரு பெண்களுக்கு விவேக நாயகி விருதும் வழங்கப்படவுள்ளது.

பிறக்கவுள்ள இந்து புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இந்து புத்தாண்டு 2018’ விழாவில் பொதுமக்கள் திரளாக வருகை தந்து, குதூகலத்துடன் புத்தாண்டை கொண்டாட மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. பொதுமக்கள் விழாவிற்கு பாரம்பரிய உடை அணிந்து வருமாறு பத்திரிகை அறிக்கை ஒன்றீல் இந்து சங்கத் தேசியத்தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன்ஷாண் தெரிவித்தார்.

##   விளம்பி புத்தாண்டு பிறக்கும் நேரம்##  

ஏப்ரல் 14ஆம் தேதி, சனிக்கிழமை, மலேசிய நேரப்படி,  காலை 9.31 மணி

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS