‘வேஸ்’பயனீட்டுக்காக காரோட்டிக்கு  சம்மன் இல்லை! போலீஸ் விளக்கம்

சமூகம்
Typography

சுபாங் ஜெயா, ஏப்ரல்.13- காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, கையில் தொலைபேசியை வைத்திருந்த குற்றத்திற்காக தான் கார் ஓட்டுநர் ஒருவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. அவர் ‘வேஸ்’ செயலியை உபயோகித்ததற்காக அல்ல என்று சுபாங் ஜெயா வட்டார போலீஸ் துணை ஆணையர் முகமட் அஸ்லீன் சடாரி கூறினார். 

‘வேஸ்’என்ற செயலி தான்  உபயோகித்ததால் போலீசார் தனக்கு சம்மன் கொடுத்தனர் என்று அந்தக் கார் ஓட்டுநர் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவுச் செய்த்து தொடர்பில் கருத்துரைத்த முகமட் அஸ்லீன் அவ்வாறு கூறினார்.

“கார் ஓட்டும் போது அந்தக் கார் ஓட்டுநர் தனது கையில்   கைத்தொலைபேசியை வைத்திருந்த காரணத்தால் தான் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அவர் வேஸ் ஆப்பை உபயோகித்ததற்காக அல்ல” என்று அஸ்லீன் சொன்னார். 

காரில் கைத்தொலைபேசி வைக்கும் இடத்தில் அந்தக் கார் ஓட்டுநர் தனது கைத்தொலைபேசியை வைத்திருந்தால், அவருக்கு சம்மன் வழங்கப்பட்டிருக்காது. அவர் கைத்தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு கார் ஓட்டினார். அது சட்டப்படி குற்றமாகும் என்று அஸ்லீன் விளக்கினார். 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS