புத்தாண்டு: நாடு தழுவிய அளவில் ஆலயங்களில் திரண்ட மக்கள்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.14- நாடு தழுவிய அளவில் இன்று இந்தியர்கள் தங்களின் புத்தாண்டைக் கொண்டாடினர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியா முழுவதிலும் உள்ள முக்கிய ஆலயங்களில் காலையில் நடந்த பூஜைகளில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களின் வழிபாடுகளைச் செய்தனர்.

இதே தினத்தில் பஞ்சாபியர்கள் மற்றும் சிங்கள மக்கள் ஆகியோருக்கும் புத்தாண்டு என்பதால் அவர்களும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். சிங்கள் மக்கள் புத்த ஆலயங்களில் தங்களது பிரார்த்தனைகளை நடத்தினர்.

விளம்பி புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில்  இந்து மக்கள் காலையிலேயெ திரண்டனர். மேலும் இன்றைய தினம் வார விடுமுறை நாளாக அமைந்ததால் பொதுவாக ஆலயங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தலைநகர் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில், பத்துமலை சுப்பிரமணியர் ஆலையம், ஜாலான் பண்டார் மகா மாரியம்மன் ஆலையம் , அம்பாங் இராஜ இராஜேஸ்வரி ஆலயம்  உள்ளிட்ட ஆலயங்களில் நடந்த சிறப்புப் பூஜைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும் இன்று மாலையிலும் ஆலயங்ககளில் நடக்கும் புத்தாண்டு சிறப்புப்  பூஜைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS