கே.ஐ.ஏ.எல். விமான நிலையத்தில்  உலகிலேயே மிகப்பெரிய விமானம்!

சமூகம்
Typography

சிப்பாங், ஏப்ரல்.15-  உலகின் மிகப்பெரிய விமானமான அண்டோனோவ் 225 மிரியா என்ற சரக்கு விமானம் தனது முதலாவது வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டு  நேற்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.  

"நாங்கள் சரக்குகளை வினியோகிக்கும் பொருட்டு மலேசியாவுக்கு இந்த முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளோம். ஜெர்மனியின் லெய்ப்ஜிக் விமானநிலையத்தில் தரையிறங்கி பின்னர், சவுதி அரேபியாவின் டாம்மாமில் தரையிறங்கி சரக்குகளை ஏற்றி இறக்கி விட்டு மலேசியாவிற்கு வந்து சேர்ந்த்திருப்பதாக விமானி டிமைட்ரோவ் தெரிவித்தார்.

இந்த விமான 24 ஊழியர்களுடன் இங்கு வந்து சேர்ந்துள்ளது. பின்னர் இங்கிருந்து மீண்டும் சவுதி அரேபியாவிற்கு விமானம் புறப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த விமானம் 84 மீட்டர் நீளமும் 18 மீட்டர் உயரமும் கொண்டது.  கிட்டத்தட்ட 640 டன் சரக்குகளைச் சுமந்து செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது. உக்ரேய்னுக்குச் சொந்தமான இந்த விமானத்தில் ஐந்து விமானங்களில் ஏற்றக்கூடிய அளவிலான சரக்குகளை ஏற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS