கோரத் தீ: மூன்று சிறுவர்களின்  உயிரைப் பறித்த துயரம்!

சமூகம்
Typography

கோத்தா கினாபாலு. ஏப்ரல்.16- இங்கு கம்போங் பகாகாவ் என்ற பகுதி ஒன்றில் உள்ள பலகை வீட்டில் நேற்றிரவு தீ ஏற்பட்டதில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். 

சபா மாநிலத்தின் கிழற்கு கடற்கரையில் உள்ள செம்பொர்ணா வட்டாரத்தில் உள்ள அந்த வீட்டில் ஏற்பட்ட தீயை விரைவாக கட்டுப்படுத்தி, அந்த வீட்டினுள் சிக்கிக் கொண்ட சிறுவர்களை எப்படியாவது மீட்டிட முயற்சித்த தீயணைப்பு வீரர்கள், இறந்த அச்சிறுவர்களின் உடல்களை கண்ணீர் தேங்கிய கண்களுடன் மீட்டனர். 

''நாங்கள் அங்குச் சென்றடைந்த போது, தீ முற்றிலும் பரவிய வண்ணமாக இருந்தது. இருந்த போதிலும், அதனை விரைவாக கட்டுப்படுத்திட நாங்கள் முயற்சித்தோம்'' என்று தீயணைப்பு வீரர் ஒருவர் கூறினார். 

அந்தத் தீச்சம்பவத்தில் உயிரிழந்த இரு பெண் சிறுமிகள் மற்றும் ஓர் ஆண் சிறுவனின் உடல்களை  இரவு 9 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீர்ர்களுக்கு மாலை 7.47 மணிக்கு தெரிவிக்கப்பட்ட்தாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நடவடிக்கை குழுத் தலைவர் கதீஸா ரஹாபான் கூறினார். 

அச்சம்பவத்தில் இறந்த சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. அத்தீச்சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS