தனியார் கல்லூரி போலி சான்றிதழ்கள் விற்பனை;  இந்தியர் உள்பட மூவர் கைது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.16- நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளின் சான்றிதழ்களைப் போன்ற சான்றிதழ்களை தயாரித்து விற்பனைச் செய்த மூவரை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கைது செய்துள்ளது. 

ஜாலான் ஈப்போவில் நடத்தப்பட்ட சோதனை வாயிலாக 30 வயதிலிருந்து 34 வயதிற்குட்பட்ட அந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அம்மூவரால் தயாரிக்கப்படும் போலிச் சான்றிதழ்களை பிரிண்ட் செய்ய உதவிய ஆடவரை அடையாளம் காணும் பொருட்டு, அவர்களிடத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

“டிப்ளோமா மற்றும் டிகிரி பட்டங்களை அவர்கள் விற்பனை செய்துள்ளனர். அந்தப் போலிச் சான்றிதழ்களை அவர்கள் ஒரு வாரத்தில் தயார் செய்து கொடுத்து விடுவார்கள். அதற்கு ரிம. 2,000 தொடங்கி ரிம.16,000 வரை அவர்கள் கட்டணமாக வசூலித்துள்ளனர்” என்று அவர் சொன்னார். 

அக்கல்லூரிகளில் வேலைச் செய்பவர்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்படுகிறது. கைதான அம்மூவரும் போலீஸ் தடப்பு காவலில் வைக்கும் பொருட்டு, புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் துணை ஆணையர் அஸாம் பாக்கி கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS