மூத்த இசைக் கலைஞர் ஜிம் மாடசாமி காலமானார்! ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- மூத்த இசைக் கலைஞரும் முன்பு பிரபலமாக விளங்கிய 'புளூஸ் கேங்க்' என்ற இசைக் குழுவின் உறுப்பினருமான ஜிம் மாடசாமி,  தம்முடைய 68 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ள அவரது ரசிகர்கள், சமூக ஊடகங்களில் அவருக்கு தங்களின் ஆழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

1970 ஆம் ஆண்டுகளில் பிலூஸ் கேங்க் இசைக் குழு மிகப் பிரபலமாக விளங்கி வந்தது.  அந்தக் குழுவில் கித்தார் இசைக் கலைஞனாக திகழ்ந்தவர் ஜிம் மாடசாமி. முன்னாள் நெடுந்தூர ஓட்டப்பந்தய வீரரான அவர், செலாயாங்கில் சைக்கிளோட்டிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிர்நீத்தார்.

மலேசிய இசையுலக வட்டாரத்தில் நன்கு அறிமுகமான ஜிம்  மாடசாமி, நல்ல இசைக் கலைஞர் மட்டுமல்ல. மிக நேர்த்தியான மனிதர்.  இசைத்துறைக்கு பெரும் பங்காற்றியவர். எங்களை இசையால் நெகிழ வைத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று வலைத்தளவாசியான ஜெரார்டு சிங் என்பவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மலேசிய இசைப் பிரியர்களுக்கு இதுவொரு சோகமான நாள் என்று தேசிய உருமாற்றத் திட்டத்தின் ஆலோசகரான டத்தோஶ்ரீ இட்ரிஸ் ஜாலா குறிப்பிட்டார்.

மாடசாமியும் நானும் பதின்ம வயது நண்பர்கள். நாங்கள் இருவரும்  ஜொகூர் பாரு செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஒன்றாகப் படித்ததோம்.  இருவருமே நெடுந்தூர ஓட்டக்காரர்கள்.  பின்னாளில் நாங்கள் இருவரும் இசைத் துறையில் மீண்டும் இணைந்தோம் என்று கார்யாவான் அமைப்பின் தலைவரான டத்தோ பிரெடி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS